×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜ நாடகத்துக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜ நாடகத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் நுழையவில்லை. நீட் தேர்வுப் பிரச்னை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்து நீட் தேர்வு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றிருந்த அதிமுக ஆட்சிக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகம் செய்ய நினைத்த நீட் தேர்வை நிறுத்தி வைத்து – ஆட்சியை விட்டுச் செல்வதற்குள் நீட் தேர்வை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாகவே ரத்து செய்த ஆட்சிதான் இங்கு இருந்த அன்றைய கலைஞரின் திமுக ஆட்சி. தமிழ்நாடு மக்களின் மீது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை மீது, மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் 27 மாதங்கள் மசோதா என்ன ஆனது என்றே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய அதிமுகவிற்கு – 142 நாட்களுக்குள் திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதை உணர முடியாதுதான்.“நீட் தேர்வை நாம்தானே திணித்தோம்” “தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தது நாம்தானே” என்ற குற்றம் உள்ள மனசு குறுகுறுப்பதால்தான் அதிமுகவும், பாஜவும் இணைந்து ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை சொல்ல வர மறுக்கிறது. இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவும் ஒன்றிய அரசாக உள்ள பாஜவும் கூச்சமின்றித் தொடருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜ நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், மாணவர் சமுதாயமும் இணைந்து தக்க பதிலடி கொடுக்கும்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜ நாடகத்துக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,AIADMK ,body ,DMK ,general secretary ,Duraimurugan ,Chennai ,ADMK ,BJP ,
× RELATED எடப்பாடி 2வது நாளாக ஆலோசனை கட்சியை...