- செயின்ட் லூர்து
- திருமுத்துராப்பூண்டி
- மெதித்ரபூண்டி
- டான்ஜய் முர்
- ஜூபிலி ஆண்டு
- லூர்து புனித தாய்
- விழா
- ஜூபிலி ஆண்டு
- வாலாங்கோயில்
- த்ரிதரபூண்டி
- அமிர்தராஜ்
திருத்துறைப்பூண்டி, ஆக.4: திருத்துறைப்பூண்டி பங்கு புனித லூர்து அன்னை ஆலயத்தில் உலக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் யூபிலி ஆண்டு இந்த ஆண்டு போப் ஆண்டவர் அறிவிக்கப்பட்ட எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டாக கொண்டாடுவதன் அடையாளமாக தஞ்சை மறை மாவட்டத்தில் இருந்து யூபிலி சிலுவையானது மறை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பங்கிற்கும் சென்று வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பள்ளங்கோயில் பங்கில் இருந்து திருத்துறைப்பூண்டி பங்கிற்கு யூபிலி சிலுவையானது வந்தடைந்தது.
அதனை பள்ளங்கோயில் கோவில் பங்கு தந்தை அமிர்தராஜ் அவர்கள் கையிலேந்தி திருத்துறைப்பூண்டி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தை மனோஜ் பிரபாகர் மற்றும் பங்கு மன்ற செயலாளர் துணைத் தலைவர் மற்றும் ஏராளமான இறைமக்கள் மண்ணை ரோடு ரயில்வே கேட்டில் இருந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
