×

ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் கன்னியம்மன் கோயில் கூழ் வார்த்தல் விழா

 

கூடுவாஞ்சேரி, ஆக. 4: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த, ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள  சப்த கன்னியம்மன் கோயில் 36ம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கூழ் வார்த்தல் திருவிழா கடந்த 1ம் தேதி நடைபெற்றது.
இதில், கன்னியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா வந்தது. விழாவில், 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து, மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் முன்னாள் பாஜ ஓபிசி அணி மாவட்ட தலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான டில்லிராஜ் மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்திலும் கராத்தே, சிலம்பம், கத்தி சண்டை, சுருள் சண்டை, பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
இதில், 2000 பேருக்கு சமபந்தி விருந்துகளும் வழங்கப்பட்டன.

 

Tags : Kanniyamman Temple Pouring Ceremony ,Oonaimancherry Panchayat ,Kuduvanchery ,Saptha Kanniyamman Temple ,Vandalur, Chengalpattu district ,36th Aadi month festival ,Kanniyamman ,BJP OBC ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...