×

பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரம் விநியோகம்

 

வாழப்பாடி, ஆக.3: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இதையொட்டி, சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி நகர பாமக சார்பில் நகர செயலாளர் அண்ணாதுரை தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழப்பாடி பஸ்நிலையம், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது, பாமக நிர்வாகிகள் நவீன், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சண்முகம், சிங்கிபுரம் அன்பு, கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : PMK Women's Conference ,Vazhappadi ,Patali Makkal Katchi ,Poombukhar ,PMK ,Ramadoss ,Salem North District Vazhappadi City PMK ,City Secretary ,Annadurai ,North ,District Secretary ,Selvam ,Naveen ,Vanniyar Sangam ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்