×

கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, டிச.20: கெங்கவல்லி ஒன்றியம் ஆணையாம்பட்டி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் மகன் சிவக்குமார்(25), ஏசி மெக்கானிக்காக உள்ளார். கெங்கவல்லி அருகே தெடாவூர் புதூர் மேலவீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் வினோதினி(20), தலைவாசல் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், வினோதினிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15ம் தேதி சின்னசேலம் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, நேற்று கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி இருதரப்பு பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பு பெற்றோரும் காதல் ஜோடிகளை ஏற்றுக்கொண்டதால், அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : Kengavalli ,Mohan Son Sivakumar ,Agraharam ,Kengavalli Union Commissioner ,Venkatesan ,Vinodini ,Dedavur Putur Upper Road ,Thalawasal Private College ,
× RELATED ஓமலூர் பேரூராட்சியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் பணிகள்