- சேலம்
- அம்மன்
- ஆடி
- ஆடிப்பெருகை
- காலா அம்மான்
- சேலம் கோட்டை மாரியம்மன்
- சேலம் சுகவனேஸ்வரர்
- அம்மாபேட்டை
- செங்குந்தர் மாரியம்மன்
- குகை காளியம்மன்
- மாரியம்மன்
- செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன்
- அன்னதானப்பட்டி மாரியம்மன்
- குமாரசாமி பட்டி
- கையாபிடாரியம்மன்
- தாரமங்கலம் கைலாசநாதர்
- பேலூர் தான்தோன்றீஸ்வரர்
- ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர்
- அரகலூர்
சேலம், ஆக.3: ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்களில் காலை அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி, குங்குமம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இதேபோல் சேலம் சுகவனேஸ்வரர், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், குமாரசாமிப்பட்டி எல்லைபிடாரியம்மன், தாரமங்கலம் கைலாசநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், சேலம் தேர்நிலையம் ராஜகணபதி உள்பட சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. குறிப்பாக குலதெய்வ வழிபாடுகள் அதிகளவில் நடக்கிறது.
