×

கனடா ஓபன் டென்னிஸ்: திக்கித் திணறிய இவா; வேகத்தில் வென்ற இகா

டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். கனடாவில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் (24), ஜெர்மன் வீராங்கனை இவா லிஸ் (23) மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் வேகமாக செயல்பட்ட இகா முதல் செட்டை எவ்வித சிரமமும் இன்றி 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டையும், அவரே, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தி வெற்றி வாகை சூடினார். அதனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா (23), பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு (22) மோதினர். இதில் ஆக்ரோஷமாக ஆடிய அமண்டா, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் பிரிவில் டெய்லர் வெற்றி
கனடா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் (27), கனடா வீரர் கேப்ரியல் டியல்லோ (23) மோதினர். அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்திய டெய்லர், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர்கள் பென் ஷெல்டன், பிராண்டன் நகாஷிமா மோதினர். இதில், 6-7 (8-10), 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Canada Open Tennis ,Eva ,Iga ,Toronto ,Iga Swiatek ,Canada Open Tennis Women's Singles Tournament ,Canada Open Tennis Tournament ,Canada ,Eva Lis ,
× RELATED விசாகப்பட்டினத்தில் இன்று...