×

ஈஸ்போர்ட்ஸ் உலக செஸ்: அலிரெஸாவை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்

ரியாத்: சவுதி அரேபியாவில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில், உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்தன. இறுதிச் சுற்றில், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஈரான் மற்றும் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜா மோதினர். முதல் செட் போட்டிகளில், கார்ல்சன் அபாரமாக ஆடி முதல் வெற்றியை பதிவு செய்தார்.

தொடர்ந்து இரு போட்டிகள் டிரா ஆனதால், கார்ல்சன், 3-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பின் நடந்த 2வது செட் போட்டிகளில் ஒன்றில் கார்ல்சன் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடந்த போட்டியில் அபாரமாக ஆடிய கார்ல்சன் வெற்றி வாகை சூடினார். அடுத்ததாக நடந்த போட்டியிலும் கார்ல்சனே வென்றார். கடைசியில், கார்ல்சன், 4 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி கணக்கில் முன்னிலை வகித்தார். அதனால், அபார வெற்றி பெற்ற கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Tags : eSports World Chess ,Carlsen ,Alireza ,Riyadh ,Magnus Carlsen ,Grandmaster ,Alireza Firouzja ,eSports World Cup ,Saudi Arabia ,Riyadh, Saudi Arabia ,Norway ,Iran ,France ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...