×

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக ஸ்ரீஹரி பொறுப்பேற்பு

சென்னை: இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் ஸ்ரீஹரி பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது பொறுப்பேற்றுள்ள ஸ்ரீஹரி கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வாண்டூர், நடுவத் என்ற கிராமத்தை சேர்ந்தவர். மேலும், அமராவதி நகர் சைனிக் பள்ளி, கடக்வாசலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஸ்ரீஹரி ஜூன் 13, 1987 அன்று புதிதாக்க உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். இப்படைப்பிரிவு பின்னர் ஆகஸ்ட் 1992ல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார். ஆபரேஷன் ரக் ஷக், சியாச்சின் பனிமலை முகாம், ஸ்ட்ரைக் படைப்பிரிவின் ஒரு காலாட்படை பிரிகேட், வடகிழக்கில் ஒரு மலைப் பிரிவு, ஒரு பாரா சிறப்புப் படை பட்டாலியன் ஆகியவற்றுக்கு அவர் தலைமை வகித்துள்ளார்.

The post தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக ஸ்ரீஹரி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Srihari ,Army ,Commander ,South Indian Region ,Chennai ,Indian Army ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Andhra Pradesh ,Telangana ,Union Territories of Puducherry ,Lakshadweep ,Army Commander ,Commander for ,South ,Indian ,Region ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்