- INEX மாணவர் மன்ற தொடக்க விழா
- சேலம்
- INEX மாணவர் மன்றம்
- அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தர அறிவியல் துறை
- டாக்டர் சண்முகசுந்தரம் ஆடிட்டோரியம்
- துறைத் தலைவர்
- பூங்குழலி
- இன் முதல்வர்
- அன்புசேஷியான்
- தின மலர்
சேலம், ஆக. 1:அன்னபூரணா பொறியியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறை சார்பில், ஐநெக்ஸ் என்ற மாணவர் மன்றத்தின் தொடக்க விழா, டாக்டர் சண்முகசுந்தரம் அரங்கத்தில் நடைபெற்றது. துறை தலைவர் பூங்குழலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்புச்செழியன், மாணவர்களின் திறன்கள் மேம்படவும் தொழில்நுட்ப உலகத்தில் சிறந்து விளங்கவும் கல்லூரியின் வளங்கள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறு பயனளிக்கின்றன என எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, தலைமை விருந்தினர் சப்போர்டிகான் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனர் மணிகண்டன், ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு பொறியாளராக உயர்வடைய தேவையான திறன்கள், முயற்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை பற்றி பேசினார். கிராமப்புற பின்னணியில் இருந்து உலக தர தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து, பின்னர் தொழில்முனைவோராகி, ஹெல்ப்டியூட் எனும் பிளாட்பாமை உருவாக்கிய அவரது பயணம் குறித்து விவரித்தார். பின்னர், ஐநெக்ஸ் மாணவர் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் உறுதிமொழியும், மாணவர் தலைவர் உரையும் நடைபெற்றன.
The post ஐநெக்ஸ் மாணவர் மன்றம் தொடக்க விழா appeared first on Dinakaran.
