×

நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பெரும்புதூர், ஆக. 2: நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் வெங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை மற்றும் நாவலூர் கிராம தன்னார்வலர்கள் இணைந்து 400 மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கொளத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கந்தன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம், ஊராட்சி தெருக்களின் இரு புறமும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், தொழிற்சாலை நிர்வாகிகள் சோமசுந்தரம், கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சங்கர், நாவலூர் கிராம தன்னார்
வலர்கள் விஜய், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Navalur village ,Navalur ,Government Neutral School ,Union ,Kolathur ,planting ,Venkad ,Ipilli ,Deputy ,Kolathur Municipal Council ,Kandan ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்