×

கல்லூரி மாணவி ஆசிரியை மாயம்

கெங்கவல்லி, ஆக.1: கெங்கவல்லி அருகே கூடமலையைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் சற்குணம்(26). இவர் கூடமலை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சற்குணம், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு, விசாரித்தபோது வழக்கமாக செல்லும் பஸ்சில் கிளம்பி விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, முருகேசன் கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகள் இலக்கியா(21). பிஏ ஆங்கிலம் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த தனது ஆதார் கார்டு மற்றும் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு இலக்கியா மாயமானதாக பெற்றோர் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு தேடி வருகின்றனர்.

Tags : Kengavalli ,Murugesan ,Sarkunam ,Koodamalai ,SI Ganeshkumar ,Muthusamy ,Ilakkiya ,Odhiathur ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்