×

ஐகோர்ட் வக்கீல் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி காலம் தாழ்த்தாமல் தண்டனை பெற்று தந்து, இனிமேல் கொலைகள் நடக்காது என்பதற்கு ஏற்ப ஆட்சி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. கொலை நடக்காமல் இருக்க 24 மணிநேர கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கில் அதிக கவனம் செலுத்ததமிழக அரசு முன்வர வேண்டும் இவ்வாறு கூறி உள்ளார்.

The post ஐகோர்ட் வக்கீல் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : High Court ,G.K. Vasan ,Chennai ,Maññaya Congress Party ,Madras High Court ,Muruganandam ,Tarapuram ,Tiruppur district ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...