×

‘இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம்’ முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்: சத்யராஜ் பேட்டி

சூலூர்: ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக, ‘நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம்’ என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.கோவை சூலூரில் சத்யராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கியது நல்ல விஷயம். அவர் பெரியார், அம்பேத்கர், காமராஜரை முன்னுதாரணமாக வைத்து பேசியது ரொம்ப நல்ல விஷயம். இதை வரவேற்கிறோம். எனது மகள் திவ்யாவிற்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. அவர் பகுத்தறிவு உள்ள, மூடநம்பிக்கை இல்லாத, சமூக நீதி சார்ந்த அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினே பதில் சொல்லி விட்டார். நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

The post ‘இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம்’ முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்: சத்யராஜ் பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CM ,Satyaraj ,Sathyaraj ,Union government ,Soolur ,Gov ,Vijay ,Chief Minister ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்;...