×

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

தேன்கனிக்கோட்டை, ஜூலை 30: தளி அருகே உள்ள கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் கும்ளாபுரத்தில் உள்ள கவுரம்மா கோயில் வளாகத்தில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா முன்னிலை வகித்தார். விழாவில் 30 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அறுசுவை உணவுகள் பரிமாறப் பட்டன. விழாவில் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thenkani Kottai ,Gauramma Temple ,Kumlaparam ,Kumlaparam Government Primary Health Center ,Thali ,District Health Officer ,Ramesh Kumar ,Thali Block ,Medical Officer ,Sacharitha ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு