ராயக்கோட்டை, டிச.20: ராயக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலை பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வந்து செல்வதற்காக தொழிற்சாலை சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மல்லாபுரத்தைச் சேர்ந்த பச்சலிங்கம்(36) என்பவர் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ராயக்கோட்டை அருகே நெல்லூர் பகுதியில் அந்த பஸ் வந்தபோது, உல்லட்டி கிராமத்தைச் சேர்ந்த காந்த்(21) என்பவர் திடீரென பஸ்சை மறித்துள்ளார். பின்னர், எதற்காக மோதுவது போல் பஸ்சை ஓட்டி வந்தாய் எனக்கேட்டு தகாத வார்த்தையால் பேசி பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து காந்தை கைது செய்தனர்.
