தேன்கனிக்கோட்டை, டிச. 18: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஏணிஅத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரப்பா (65), விவசாயி. இந்நிலையில், நேற்று காலை விவசாய நிலத்தில் அறுவடை செய்த ராகியை கட்டி கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் இருந்து கலைந்த தேனீக்கள் கூட்டம் மாரப்பாவை திடீரென கொட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
