- முஸ்லிம்கள்
- திருப்பூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- தௌஹீத் ஜமாஅத் மாவட்டம்
- பொது
- குழு
- திருப்பூர் காங்கேயம் சாலை
- மாநில துணைத் தலைவர்
- தாவூத் ஹைசர்
- மயிலை அப்துல் ரஹீம்
- நெல்லை ஃபைசல்
- சிக்கந்தர்
- மாவட்ட செயலாளர்
- அன்சார்
- பொருளாளர்
- தௌபீக்
- துணை ஜனாதிபதி
- அப்துல்லா
திருப்பூர், ஜூலை 29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் தனியார் மண்டபத்தில் மாநில துணைத்தலைவர் தாவூது ஹைசர், மாநில செயலாளர்கள் மயிலை அப்தூல் ரஹீம், நெல்லை பைசல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக சிக்கந்தர் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளா் அன்சர், பொருளாளர் தௌபிக், துணைத்தலைவர் அப்துல்லா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
இதில் பீகாரில் ஒரே மாதத்தில் 51 லட்சம் வாக்காளர்களை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஸ்பெசல் இன்டென்சிவ் ரிவிசன் என்ற செயல் திட்டத்தை உடனே நீக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
