×

சூதாடிய 6 பேர் கைது

 

காங்கயம், மார்ச் 14: காங்கயத்தில் சூதாடி வருவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காங்கயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு, பணம் வைத்து சூதாடிய சென்னிமலையை சேர்ந்த லோகநாதன் (46), திருப்பூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த அக்கிம் (47), காங்கயத்தை சேர்ந்த பழனிசாமி (36), ராசு (50), சேகர் (44), ஸ்ரீதர் (28), ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டுகட்டுகளையும், ரூ.5,400 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Kangayam ,Kangayam police ,Chennimalai Road ,Lokanathan ,Chennimalai ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்