×

கொங்கணகிரி பகுதியில் 18 பேருக்கு வீட்டுமனை பட்டா

 

திருப்பூர், மார்ச் 14: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி பகுதியை சேர்ந்த 107 பேருக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பட்டா வழங்கப்பட்டது. இதில் 18 பேருக்கு சில காரணங்களால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே இதற்கு தீர்வு காணப்பட்ட நிலையில் நேற்று திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 18 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டது. இதனை செல்வராஜ் எம்எல்ஏ, கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் ஆகியோர் வழங்கினர். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வடக்கு தாசில்தார் கண்ணாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Konkanagiri ,Tiruppur ,Tiruppur College Road ,Selvaraj ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்