×

நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே, திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்றனர். ஏற்கெனவே தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள நிலையில், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து அவை நிகழ்வுகள் தொடங்கியது. இன்று நாடாளுமன்ற அவைகளில் அப்ரேஷன் சிந்தூர் பற்றிய விவாதங்கள் நிகழும் என கூறப்பட்டிருந்த நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்துள்ள நிலையில், மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை முடங்கியது. இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

The post நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Both Houses of Parliament ,Delhi ,Houses of Parliament ,Lok Sabha ,Speaker ,Om… ,Houses ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...