டெல்லி: டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிச.26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
* சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
* 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா என கட்டணம் உயர்வு
* மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு
* பயணிகள் ரயில், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை.
* அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு
* 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்வு
டிக்கெட் கட்டண உயர்வின் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
