×

பீக்கிலிபட்டியில் ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் கூடம்

 

எட்டயபுரம் ஜூலை 28: கோவில்பட்டி யூனியன், உருளைகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பீக்கிலிபட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உணவு அருந்தும் கூடத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல்நாட்டி கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தார்.

நிகழ்வில் கோவில்பட்டி யூனியன் பிடிஓ முத்துக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் கோவில்பட்டி கிழக்கு நவநீதக்கண்ணன் கோவில்பட்டி மத்தி பீக்கிலிபட்டிமுருகேசன் விளாத்திகுளம் தெற்கு இமானுவேல் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பூமாரி முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் சுரேஷ், சோப்பியா பொன்னையா, கிளை செயலாளர்கள் மாடசாமி, கண்ணன், மாடசாமி, பாக முகவர் மோகன், எட்டையாபுரம் நகர துணைச்செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post பீக்கிலிபட்டியில் ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் கூடம் appeared first on Dinakaran.

Tags : Peekilipatti ,Ettayapuram ,Urulaikudi Panchayat of Kovilpatti Union ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...