×

தேசிய மருத்துவர்கள் தினம்!

நன்றி குங்குமம் தோழி

ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையின் முன்னோடிகள், முன்னணி மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து, டாக்டர் ஹண்டே அவர்கள் இவ்விருதைப் பெற்றார். 98 வயதான டாக்டர் ஹண்டே அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் முன்னோடி. மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அவரது பல கால சேவை, தலைமுறை தலைமுறையாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் உடன் இணைந்து போலியோ தடுப்பூசி பணியைத் தொடங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. இவ்விருதை தமிழ்நாட்டின் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் அவர்கள் வழங்கினார். ‘‘ஹண்டே மருத்துவமனையில் உயர்தர, நவீன சிகிச்சை முறைகளை எளிமையாகவும் மலிவாகவும் வழங்குவதன் மூலம் நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை மூலம் பங்களித்து வருகிறோம்’’ என்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணா ஹண்டே கூறினார். சென்னை ஷெனாய் நகரில் இயங்கி வரும் ஹண்டே மருத்துவமனை முழுமையான நவீன சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது. புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

“நோய்கள் உடலுக்கும் மனதுக்கும் வலி தரும். ஆனால், சிகிச்சை எளிமையாகவும் குறைந்த வலியுடனும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக லேசர் மற்றும் மைக்ரோவேவ் அப்லேஷன் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த லேசர் சிகிச்சை மூலமாக மூல வியாதி (Piles), பிளவு (Fissure), பிஸ்டுலா (Fistula) போன்ற பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும். லேசர் மூலம் சிகிச்சையினை மேற்கொள்வதால், குறைந்த வலியுடன் இந்த நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சிறுநீரகக் கல் பிரச்னையால் ஏற்படும் கடும் வலியையும் லேசர் சிகிச்சை முறை தீர்க்கிறது. வெரிகோஸ் வெயின்ஸ் (Varicose veins), லைப்போசக்‌ஷன் (Liposuction), ஆண் மார்பக வீக்கம் (Gynecomastia) போன்ற பிரச்னைகளுக்கும் லேசர் சிகிச்சை நம்பகமான தீர்வாக அமைந்திருக்கிறது. தைராய்டு கட்டிகள் (Benign Thyroid Nodules) மற்றும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு (Uterine Fibroids) மைக்ரோவேவ் அப்லேஷன் கருவியால் சிகிச்சை செய்யப்படுகின்றன.

அதனால், அவை ஒரு மாதங்களில் மறைந்து விடுகின்றன. லேசர் சிகிச்சை முறையில் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பெண்களுக்கு ஏற்படும் ஃபைப்ரோஅடெனோமா (Fibroadenoma) மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற சிக்கல்களுக்கும் மைக்ரோவேவ் அப்லேஷன் புதிய வாய்ப்புகளை அளிக்கிறது. மேலும், லேப்ராஸ்கோபிக் மூலம் பித்தப்பை மற்றும் கர்ப்பப்பை அகற்றுதல், குடல் வால் சிகிச்சை, முடி மாற்று சிகிச்சை (FUE) போன்ற பல அறுவை சிகிச்சைகளையும் எங்கள் மருத்துவமனையில் மேற்கொண்டு வருகிறோம்.’’

தொகுப்பு: நிஷா

 

Tags : National Doctors Day ,Rotary International Club of Thanksgiving Saffron Companions ,Dr. ,Hande ,Minister ,Rotary International Club ,Dr ,Tamil Nadu ,
× RELATED பெண்கள் சிற்பக்கலை பயில முன்வர வேண்டும்!