நன்றி குங்குமம் தோழி
எலுமிச்சம் பழத் தோலின் பயன்கள்
*எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தியதும் தோலை எறிந்து விடாமல் வெயிலில் காயவைத்து பொடித்துக் கொண்டால் அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து இட்லி, தோசைக்கும், சாதத்துக்கும் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.
*எலுமிச்சை தோலை காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு ரசத்தில் சிறிது சேர்த்தால் ரசத்தின் சுவையும், மணமும் கூடும்.
*எலுமிச்சை சாதத்துக்கும் மேற் கொண்ட பொடியை பயன்படுத்தலாம்.
*எலுமிச்சை தோலை நறுக்கி, உப்பு தூவி இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து மிளகாய் பொடி கலந்து நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயப் பொடி தாளித்தால் சுவையான ஊறுகாய் கிடைக்கும்.
*எலுமிச்சை ேதால் பொடியை உப்புமாவில் சிறிது கலந்தால் சுவை கூடும்.
*எலுமிச்சை தோலால் நகங்களை தேய்த்துக் கழுவினால் நகங்கள் உடையாது. சுத்தமாகவும் இருக்கும்.
*எலுமிச்சை பொடியால் முகம், கை கால்களில் தடவிக் கொண்டு கழுவினால் சருமம் மின்னும்.
*எலுமிச்சை தோலால் செம்புப் பாத்திரங்களை தேய்த்தால் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
*எலுமிச்சம் பழ தோலால் தோல் பொருட்களை தேய்த்தால், அவற்றில் படிந்துள்ள கரைகள் நீங்கி புதியது போலாகிவிடும்.
*எலுமிச்சை தோலை ஃபிரிட்ஜில் அங்கங்கே போட்டு வைத்தால் வாடை வராது. வாசனைதான் வரும்.
*சமையலறை சிங்க்கை எலுமிச்சை தோலால் தேய்த்து விட்டு கழுவினால் கிருமிகள் அகன்று சுத்தமாகும்.நறுமணம் வீசும்.
தொகுப்பு: எஸ்.ராஜம், திருச்சி.
