×

பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக்.பள்ளியில் 28ம் ஆண்டு விளையாட்டு தினவிழா

 

பெரம்பலூர், ஜூலை 26: பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 28ம் ஆண்டு விளையாட்டு தினவிழா நேற்று நடைபெற்றது. ரோவர் கல்விகுழுமத்தின் மேலாண் தலைவர் டாக்டர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மகாலெட்சுமி வரதராஜன் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஹேமலதா, மாவட்ட தலைமை உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் டாக்டர் ராஜலெட்சுமி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். கொடியேற்றப்பட்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பார்வையாளர்களை கவரும் விதமாக மாணவர்கள் சிலம்பம், கராத்தே மற்றும் பிரமிடு போன்ற நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். ரோவர் கல்விக்குழுமங்களின் அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி இயக்குனர் சக்தீஸ்வரன், பள்ளியின் துணை முதல்வர் கென்னடி, பள்ளி மேலாளர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் கதிரவன், அருண்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஏஞ்சலின் ஜெனிதா நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக்.பள்ளியில் 28ம் ஆண்டு விளையாட்டு தினவிழா appeared first on Dinakaran.

Tags : 28th Annual Sports Day ,Perambalur ,Father Rover Matriculation Higher Secondary School ,Perambalur Father Rover Matriculation Higher Secondary School ,Dr. ,Varadharajan ,Managing Director ,Rover Educational Group ,Deputy ,John Ashok Varadharajan ,Dinakaran ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி