×

பிரைம் வாலிபால் லீக் ஐதராபாத்தில் இன்று தொடக்கம்

ஐதராபாத்: பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) தொடர் ஐதராபாத்தில் இன்று  தொடங்குகிறது. சென்னை பிளிட்ஸ் உட்பட 7 அணிகள்  பங்கேற்கின்றன. கச்சிபோலி உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 27ம் தேதி வரை தினமும்  போட்டி நடக்கும். லீக் சுற்று பிப்.23ம் தேதி முடிவடைகிறது. அரையிறுதி  ஆட்டங்கள்  பிப்.24, 25  தேதிகளில் நடக்கும். பிப்.27ல் பைனல் நடைபெற உள்ளது. ஆட்டங்கள் தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும். ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் – கொச்சி அணிகள் மோதுகின்றன. பங்கேற்கும் அணிகள்: சென்னை, ஐதராபாத், கொச்சி, அகமதாபாத், கொல்கத்தா்், பெங்களூரு, காலிகட்….

The post பிரைம் வாலிபால் லீக் ஐதராபாத்தில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Prime Volleyball League ,Hyderabad ,PVL ,Chennai Blitz ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...