×

யூரோ கோப்பை மகளிர் கால்பந்து; வேகம் இழந்த இத்தாலியை விவேகமாய் சாய்த்த இங்கி. : இறுதிக்கு முன்னேற்றம்

ஸ்டாக்ஹோம்: சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில், யூரோ கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், இத்தாலி அணியும் மோதின. இப்போட்டியில் இத்தாலி வீரர்கள் ஆரம்பம் முதல் துடிப்புடன் ஆடி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பார்பரா போனன்ஸீ அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதன் பின் இரு அணி வீராங்கனைகளும் கோல் போடுவதில் வேகம் காட்டினர். ஆனால் இரு தரப்பும் சம பலத்தில் மோதியதால் எளிதில் கோல் போட முடியவில்லை. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இங்கிலாந்து அணியின் மிச்செல் ஆக்யேமாங், 90+6வது நிமிடத்தில் (ஸ்டாப்பேஜ் டைம்) அற்புதமாக ஒரு கோல் அடித்து சமநிலைக்கு போட்டியை கொண்டு வந்தார்.

அதன் பின், கூடுதலாக அரை மணி நேரம் தரப்பட்டது. அதில் சுதாரித்து விவேகத்துடன் ஆடிய இங்கிலாந்தின் க்ளோ கெல்லி, 119வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியுடன் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மோதும்.

The post யூரோ கோப்பை மகளிர் கால்பந்து; வேகம் இழந்த இத்தாலியை விவேகமாய் சாய்த்த இங்கி. : இறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Euro Cup Women's Football ,England ,Italy ,Stockholm ,Switzerland ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...