- தாமிராபராணி நதி
- முதன்மை பொறியியலாளர்
- மதுரை வலயம்
- நீர்வளத் துறை
- Nithiravilai
- பரகனி
- வைக்கலூர்
- கில்லியூர்
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
நித்திரவிளை : கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வைக்கல்லூர் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் பரக்காணி தடுப்பணையின் வலது கரையில் 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டது.இதையடுத்து மண் அரித்து சென்ற பகுதியை சீரமைக்க தமிழக அரசு ரூ.2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த பணிக்கு அரசாணை மூலம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, சிற்றார் அணை 2ல் இருந்து மண் எடுக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியை நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியினை நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் இவாஞ்சலின் எஸ். பேரிடா, களப்பணியாளர்கள் வின்ஸ்லால், சிவலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தாமிரபரணி ஆற்றின் கரையில் மண் நிரப்பும் பணி நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.
