×

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் வரும் 25ம் தேதி திருப்போரூரில் அன்புமணி தொடங்குகிறார்: முதல்கட்ட பயண விவரம் வெளியீடு

சென்னை: பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பசுமை தாயகம் நாளாக கொண்டாடப்படும், பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ம்தேதி மாலை சென்னை திருப்போரூரில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி தொடங்குகிறார். இந்த பயணம் தமிழகத்தின் முக்கிய தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதி தர்மபுரியில் முடிகிறது.

26ம்தேதி செங்கல்பட்டு, உத்திரமேரூர், 27ம்தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 28ம்தேதி அம்பத்தூர், மதுரவாயல், 31ம்தேதி கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1ம்தேதி திருவள்ளூர், திருத்தணி, ஆகஸ்ட் 2ம்தேதி சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 3ம்தேதி ஆற்காடு, வேலூர், ஆகஸ்ட் 4ம்தேதி வாணியம்பாடி, திருப்பத்தூர் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நடக்கிறது. அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

The post தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் வரும் 25ம் தேதி திருப்போரூரில் அன்புமணி தொடங்குகிறார்: முதல்கட்ட பயண விவரம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Tamil Nadu People's Rights Recovery Tour ,Thiruporur ,Chennai ,PMK ,Thiruporur, Chennai ,Ramadoss ,Green Homeland Day.… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...