×

வாகன விபத்துகளை தடுக்க திண்டிவனம் – மரக்காணம் நெடுஞ்சாலையில் அடைக்கப்பட்ட சென்டர் மீடியன் குறுக்கு வழிகள்

*நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலையில், நல்லாளம் கூட்டுசாலை பகுதியில் வாகன விபத்தை தடுத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடந்த 4ம் தெதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம்-மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலையில், நல்லாளம் கூட்டுசாலை பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது சாலையினை கடக்கும் சென்டர் மீடியனை தற்காலிகமாக மூடிடவும், கூட்டுசாலை என்பதால் கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்திடவும், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்வதற்கான வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்ட வேகத்தடையுடன் ஒளிரும் சமிக்ைஞ களை அமைத்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கூட்டுசாலையினை ஒட்டிய சாலைப் பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான வேகத்தடை அமைத்திடவும், வாகன விபத்துகள் ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், இப்பகுதி மக்களுக்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம், கூட்டுசாலையினை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்தும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் கவிதா தலைமையில் உதவி பொறியாளர்கள் தீனதயாளன், கோகுல கிருஷ்ணன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் சாலையின் குறுக்கே மக்கள் திடீரென்று கடக்காதபடி அந்த குறுக்கு வழிகளை அடைத்தனர்.

The post வாகன விபத்துகளை தடுக்க திண்டிவனம் – மரக்காணம் நெடுஞ்சாலையில் அடைக்கப்பட்ட சென்டர் மீடியன் குறுக்கு வழிகள் appeared first on Dinakaran.

Tags : Tindivanam-Marakanam highway ,Tindivanam ,District Collector ,Sheikh Abdul ,Marakkanam ,Villupuram district ,Nallalam ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...