×

பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-2021 வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 571.30% சொத்து சேர்த்ததாக சத்யா பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சத்யா பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யா, கணவர் பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

The post பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Satya ,Panruti ,Adimuga ,Department of Anti-Bribery ,Adimuka ,Satya Panniserselvam ,Satya Panirselvam ,Panruthi ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து