சென்னை: 2025 -26 கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கிறது. இன்று சிறப்பு பிரிவு [மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்] கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று இணையதளம் மூலம் நடைபெற்றது. கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு [பிவிஎஸ்சி -ஏஹெச்] படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை வரும் 24ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
The post 2025 -26 கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.
