அரூர், ஜூலை 20: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் ஆடு, கோழிகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் 170க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகள் ரூ.4,200 முதல் ரூ.12,500 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ரூ.30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.
