×

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் படிச்சட்ட வெள்ளிக்கவசம் திருடிய அர்ச்சகர்கள் 2 பேர் சிக்கினர்: 7 ஆண்டாக நீடித்த வழக்கில் திடீர் திருப்பம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் படிச்சட்ட வெள்ளிக்கவசம் திருட்டு வழக்கில் அர்ச்சகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் ”படிச்சட்டம்” தோளுக்கினியாள் என்றழைக்கப்படும். இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும். கடந்த 2014 ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் திருட்டு போனது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில், புதிதாக படிச்சட்டம் ஒன்று வெள்ளி தகடுகளுடன் செய்து பழையது  போன்றே கோயிலில் வைக்க குற்றவாளிகளால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, இதுகுறித்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலை திருட்டு தடுப்பு  பிரிவு போலீசில் சென்னை கே.கே.நகர் வெங்கட்ராமன் மனு அளித்தார். அதன்பேரில்  கும்பகோணம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில்  மீண்டும் வெள்ளி தகடுகள் திருட்டு போனது தெரியவந்தது.இதையடுத்து கடந்த 1ம் தேதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்  வழக்குப்பதிந்து கோயில் அர்ச்சகர்களான நிவாச ரெங்கபட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து  திருடியது தெரியவந்தது. புதிதாக படிச்சட்டம் செய்வதற்காக பழைய  படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளி கட்டிகளை  கொடுத்ததும், நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்ததும் தெரியவந்தது.  இதையடுத்து நிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். மேலும் ஜூவல்லரியில் புதிதாக  செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதியதாக செய்யப்பட்ட  படிச்சட்டத்திற்கு வெள்ளி உருப்படிகள் 15 கிலோ எடையில் வெள்ளியால்  செய்யப்பட்டது தெரிய வந்தது….

The post மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் படிச்சட்ட வெள்ளிக்கவசம் திருடிய அர்ச்சகர்கள் 2 பேர் சிக்கினர்: 7 ஆண்டாக நீடித்த வழக்கில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Parimalarenganathar Temple ,Parimala Renganatha temple ,Mayiladuthurai… ,Mayiladuthurai Parimalarenganathar Temple ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...