×

தடையை மீறி சாலை அமைத்த விவகாரம்: மானாமதுரை நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தடையை மீறி சாலை அமைத்த விவகாரத்தில் மானாமதுரை நகராட்சி ஆணையர் பதில் தர உயநீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கிலுவிச்சி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், நீதிமன்ற தடையை மீறி சாலை அமைத்த மானாமதுரை நகராட்சி ஆணையர் மீது உயநீதிமன்றம் மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில்; தடை உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு மீண்டும் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது? என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், நகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post தடையை மீறி சாலை அமைத்த விவகாரம்: மானாமதுரை நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Court ,Manamadurai Municipal ,Commissioner ,Madurai ,High Court ,Manamadurai ,Municipal Commissioner ,Kandasamy ,Kiluvichi ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...