×

பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா

 

ராமேஸ்வரம்: இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப். 27, 28ம் தேதி இரண்டு நாட்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள நெடுந் தீவு பங்குத்தந்தை பத்தி நாதன் தெரிவித்துள்ளார். பிப். 27ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும்.

தொடர்ந்து திரு ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர்பவனி நடைபெறுகிறது. பிப். 28ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை, பின்னர் கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும். இந்தியாவில் இருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்க லாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசு விரைவில் அறிவிக்கும்.

Tags : Katchatheevu Anthony's Festival ,Rameswaram ,Katchatheevu Anthony's Temple Festival ,Indian ,Sri Lankan National Associations ,Katchatheevu festival ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...