- கல்வி அபிவிருத்தி நாள்
- பரமக்குடி
- பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளி
- காமராஜ்
- பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளி…
- கல்வி மேம்பாட்டு தின விழா
- தின மலர்
பரமக்குடி, ஜூலை 17: பரமக்குடி நகராட்சி தொடக்க பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்த நாளை அரசு அறிவித்தபடி கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டது. பரம்பக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளி சிவானந்தபுரத்தில் கல்வி வளர்ச்சி நாள் தலைமை ஆசிரியை வசந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்டக்கல்வி அலுவலர் சேதுராமன், மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் முனைவர் பாக்கியம், விரிவுரையாளர் ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மாரியம்மாள் மும்மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
