×

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கட்டுமான பணிகளில் இனி பொதுப்பணித்துறையே ஈடுபடும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: உயர்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுமானம், பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை இனி நேரடியாக மேற்கொள்ளும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பணித்துறையும் நீர்வளத்துறையும் உள்பட துறைகளை வகைப்படுத்தும் செயல்முறையின் கீழ், முதன்மை வடிவமைப்பாளர் கிளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கிளை மற்றும் இயக்குநரகம் ஆகியவை பொது பணித்துறை தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.

பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் எழுதிய கடிதத்தில், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக் கல்வித் துறை, கட்டிட வேலைகளை பொது பணித்துறைக்கு ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை இனி நேரடியாக மேற்கொள்ளும். இதுவரை கட்டுமான பணிக்காக செயல்பட்டு வந்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் கலைக்கப்படுகிறது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கட்டுமான பணிகளில் இனி பொதுப்பணித்துறையே ஈடுபடும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Works ,Government ,Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Public Works Department ,Higher Education Sector ,Water Resources Department ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்