×

படப்பிடிப்புத் தளத்தில் கார் ஸ்டண்ட் காட்சியின்போது உயிரிழந்த மோகன் ராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை

சென்னை: பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்புத் தளத்தில் கார் ஸ்டண்ட் காட்சியின்போது சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் உயிரிழப்புக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. ‘வாழை’ இறுதிக் காட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா என அவர் கூறியுள்ளார்.

The post படப்பிடிப்புத் தளத்தில் கார் ஸ்டண்ட் காட்சியின்போது உயிரிழந்த மோகன் ராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை appeared first on Dinakaran.

Tags : Mohan Raj ,Mari Selvaraj ,Chennai ,Ranjit ,Mohan Raj Annan ,Mari Selvaraj Veedenai ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்