×

பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தக்கல் செய்ய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன்  அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தக்கல் செய்ய கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற கோடைவாசத்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்காக தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஸ்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் இருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களின் விற்பனையை தடுப்பதற்கும், கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகா அவர் தெரிவித்தார். அதே போல் ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்வதற்காக குன்னூர் மற்றும் கோத்தகிரியில் சோதனை சாவடிக்க அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தியுள்ளதாகவும், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில நெடுஞ்சாலைகளில் 32 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும், தேசிய நெடுஞ்சாலைகளில் 14 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகங்களில் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு மற்றும் பழனியில் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதேபோல் கொடைக்கானலில் குடிநீர் ஏடிஎம்கள் முறையாக செயல்படுகின்றனவா என ஆய்வுசெய்ய வலியுறுத்தியுள்ளனர். இதுதவிர பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்திட்டுள்ளனர். …

The post பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தக்கல் செய்ய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ICourt ,Chennai ,Govai ,Nilgiri, Dindikal district ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை