×

முதல்வர் சமூக வலைதள பதிவு அழகு முத்துக்கோன் தியாகம் அணையாமல் இருக்கட்டும்

சென்னை: வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் இருக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: “அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம்” என்று முழக்கமிட்டு விடுதலை வேட்கைக்கான விதையை தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதல்வர் சமூக வலைதள பதிவு அழகு முத்துக்கோன் தியாகம் அணையாமல் இருக்கட்டும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,K. Stalin ,Beauty Muthukone ,K. ,Stalin ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...