×

தனது ஒன்றரை ஆண்டுகால முயற்சிக்கும் கிடைத்த வெற்றி: எம்.பி. துரை வைகோ பெருமிதம்

 

திருச்சி: திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையான ஜி கார்னர் பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் அமைப்பதற்கு தடையில்லாச் சான்றிதழ் அளித்தது ரயில்வே; தொகுதி மக்களுக்கு ஆற்றிய கடமையின் உச்சமாகவும், செய்த பணிகளில் முதன்மையாகவும் இதனைக் கருதுவதாக எம்.பி. துரை வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அனுமதிக்காக தான் செய்த பணிகளை விவரித்துள்ள அவர், ஒன்றிய அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இப்பாலம் மூலம் தென்மாவட்டங்களுக்கான சாலைப் பயணம் இன்னும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் அமையும் என்று கூறியுள்ளார்.

 

Tags : MP Durai Vaiko ,Trichy ,G Corner ,
× RELATED தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில்...