×

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் நாடாளுமன்ற கூட்டு குழு முன் மாஜி தலைமை நீதிபதிகள் ஆஜர்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா? என்பதை ஆராய்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு வின் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஜகதீஷ் சிங் கேஹர் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா – 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா – 2024 ஆகியவை குறித்து ஆராயும் இந்தக் குழுவின் முன், அவர்கள் இருவரும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான தங்களது சட்டரீதியான மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கருத்துக்களை விரிவான விளக்கம் அளித்தனர். இத்திட்டம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்குள் பொருந்துகிறதா? என்பதைப் புரிந்துகொள்ள முன்னாள் தலைமை நீதிபதிகளின் வழிகாட்டுதல் உதவும் என குழுவின் தலைவர் சவுத்ரி தெரிவித்தார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் நாடாளுமன்ற கூட்டு குழு முன் மாஜி தலைமை நீதிபதிகள் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Joint Committee on One Nation ,One ,Election ,New Delhi ,Parliamentary Joint Committee ,Nation, One Election ,Delhi ,Chief Justices ,Supreme Court ,D.Y. Chandrachud ,Jagadish… ,Parliamentary Joint Committee on One Nation, One Election ,Dinakaran ,
× RELATED வங்கி கணக்கில் தவறுதலாக சென்று...