டெல்லி: அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே டெல்லி அரசு திட்டமிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் வானங்கள் நிற்பதை தவிர்க்க ஜனவரி வரை அதனை மூடலாம் எனவும் டெல்லியில் உள்ள சுங்கச்சாவடிகளை 3 மாதங்கள் மூடுவது குறித்து டெல்லி அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
