ஜலந்தர்: வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த அப்பாவி மக்களை ஏஜெண்ட்டுக்கள் குறிவைத்து சட்டப்பூர்வ வழிகள் மற்றும் விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதியின் பேரில் ஒரு நபருக்கு சுமார் ரூ.45லட்சம் முதல் ரூ.50லட்சம் வரை வசூலித்தனர். இவர்கள் ஆபத்தான காட்டுப்பாதைகள் வழியாக சட்டவிரோதமாக பல நாடுகளின் எல்லைகளை கடந்து ‘டாங்கி ரூட்’ பாதை வழியாக அனுப்பி மோசடி செய்துள்ளனர்.
பல்வேறு நபர்களை ஏமாற்றிய விசா முகவர்கள், இடைத்தரகர்கள் மீது பஞ்சாப் மற்றும் அரியானா காவல்துறையினால் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து பணமோசடி வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இரண்டு மாநிலங்களிலும் அமிர்தசரஸ், பட்டியாலா, மோங்கா , குருஷேத்ரா, என மொத்தம் 11 நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது.
The post சட்டவிரோத குடியேற்றம் பஞ்சாப், அரியானாவில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.
