×

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்

விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்கார வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் அருகே விராட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சாந்தமூர்த்தி (30). இவர் கடந்த ஜூன் 6ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த 16 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாந்தமூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில் சாந்தமூர்த்தியின் கொடூர குற்றத்தை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சாந்தமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Masilamani ,Shanthamoorthy ,Viratikuppam ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி