×

சாத்தூர் அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

சாத்தூர், டிச.24: சாத்தூர் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாத்தூரில் இருந்து அச்சங்குளம் செல்லும் சாலையில் சூரங்குடி உள்ளது. இங்கு தனி நபர்கள் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவியது.

எனவே போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் உலகம்மாள் தலைமையில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

 

Tags : Sattur ,Highways Department ,Surangudi ,Achankulam ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டம்