×

எடையாளர்கள் நியமிக்கக் கோரி ரேசன் கடை பணியாளர் காத்திருப்பு போராட்டம்

 

அரியலூர், ஜூலை 8: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் விடுப்பெடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், டிஎன்டிஎஸ்சி எடைத் தராசும், நியாய விலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியானஎடையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும்

குடும்ப அட்டைதாரர் விரல் ரேகை பதிவு, மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும். திருச்சியிலுள்ள கூட்டுறவுத் துறையில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் களையப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

The post எடையாளர்கள் நியமிக்கக் கோரி ரேசன் கடை பணியாளர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ration ,Ariyalur ,Tamil Nadu Government Fair Price Shop Workers' Association ,Annasilai, Ariyalur ,TNDSC ,
× RELATED சம ேவலை, சம ஊதியம் வலியுறுத்தி பெரம்பலூரில் 5வது நாளாக செவிலியர் போராட்டம்