×

பைக்கில் தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவர் களம்பூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு பணி முடிந்து இரவு பைக்கில் வீடு திரும்பினார். போளூர் அடுத்த பாக்மார்பேட்டை அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குபேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக்கில் தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Kupendran ,Kadaladi village ,Kalasappakkam ,Tiruvannamalai district ,Kalampur police station ,Bagmarpet ,Polur… ,Dinakaran ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...